பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் 'தலைவன் தலைவி'. வருகிற 25ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டராக ஆகாச வீரன் என்ற வேடத்தில் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதோடு விஜய் சேதுபதி, நித்யா மேனனுக்கு இடையிலான காதல், மோதல், கணவன் மனைவி ஆன பிறகு இருவருக்கும் இடையே நடைபெறும் ரொமான்ஸ், குடும்பச் சண்டை மற்றும் காமெடி, எமோஷனல் காட்சிகள் இணைந்த ஒரு கமர்சியல் கலவையாக இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கிராமத்துக் கதையில் உருவாகி இருக்கும் இந்த தலைவன் தலைவி படத்தில் யோகி பாபு, சரவணன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். குடும்ப கலாட்டாவாக உருவாகியுள்ள இந்த தலைவன் தலைவி படத்தின் டிரைலர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.